திருப்பூரில் காலேஜ் ரோடு பகுதிகளில் ‘ஷேர்’ ஆட்டோக்களில் மாணவர்கள் ஆபத்தான பயணம்

திருப்பூர், ஜன.29:  திருப்பூரில் ‘ஷேர்’ ஆட்டோக்களில் மாணவர்களை அதிகளவு ஏற்றிச் செல்வது அதிகரித்துள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 50 ஷேர் ஆட்டோக்கள்  இயங்கி வருகின்றன. இந்த ஆட்டோக்களில் அதிகபட்சமாக 6 நபர்களை ஏற்றிச்செல்லவும், எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற விதிமுறைகளும் ஆர்.டி.ஒ. உத்தரவில் உள்ளது. தற்போது பெரும்பாலான ஆட்டோக்களில் விதிமுறை மீறி பயணிகளை அதிகளவில் ஏற்றிச்செல்வதும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதும் நடக்கிகிறது. மேலும் சில ஷேர் ஆட்டோக்கள் சாலையில் ஓட்டுவதற்கு லாயக்கற்றதாக புகை கக்கியபடி இயக்கப்படுகிறது. இந்நிலையில், போதுமான பஸ் வசதி இல்லாத காலேஜ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில்,  ஒரே ஆட்டோகளில் மாணவர்களை புளி மூட்டை அடைப்பது போல் அடைத்து, ஏற்றி வருகின்றனர். மாணவர்களும் ஆபத்தை உணராமல் தொங்கியபடியே பயணிக்கின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: