தமிழ்நாட்டில் முதல் முறையாக குன்னூர் நகராட்சியில் பால்பாயிண்ட் பேனாவிற்கு தடை

குன்னூர், ஜன.29:   குன்னூர் நகராட்சியில்  பயன்படுத்தப்பட்ட  பிளாஸ்டிக்  பால்பாயிண்ட்  பேனாக்கள் நாள் ஒன்றிற்கு 500 கிலோ தேங்குகிறது.  இதனை தவிா்க்க  குன்னூர் நகராட்சி  அலுவலகத்தில்  பால்பாயிண்ட்  பேனாக்கள்  பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி  அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில்  நகராட்சியில் பணியாற்றும் 130 ஊழியர்களுக்கும் பால்பாயிண்ட் பேனாவிற்கு பதிலாக பவுண்ட்ைடன் பேனாக்கள் வழங்கப்பட்டன. அதற்கான மை  பாட்டில்களும்  நகராட்சி  அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு  பால்பாயிண்ட்  பேனாக்கள் பயன்படுத்துவதை  குறைத்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக  குன்னூர் நகராட்சியில்  இது அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: