சீனாவை உலுக்கும் கொரானா வைரஸ் ஊட்டியில் முன் எச்சரிக்கை நடவடிக்கை

ஊட்டி, ஜன. 29: சீனாவில் கொேரானா வைரஸ் சீனாவை உலுக்கி வரும் நிலையில், சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டியில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா நகரமாக உள்ளது. இங்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். வெளிநாடுகளில் மற்றும் வெளி மாநிலங்களில் ஏதேனும் நோய் தொற்றுகள் ஏற்பட்டால், சுற்றுலா நகரமான ஊட்டியிலும் பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது வாடிக்கை. இந்நிலையில், சீனாவில், தற்போது கொேரானா எனப்படும் வைரஸ் காய்ச்சலால் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் காற்றில் பரவக்கூடியது என்பதால், தற்போது அனைத்து நாடுகளிலும் சீனாவில் இருந்து வரும் மக்களை பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இந்தியாவிலும், இது போன்று பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், ஊட்டி சர்வதேச சுற்றுலா தலம் என்பதால், சீனா சென்று திரும்புவர்கள் யாரேனும் இங்கு வந்தால், அவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற ெதால்லைகள் இருந்தால், உடனடியாக பரிசோதனைகள் செய்ய அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஊட்டி அரசு மருத்துவமனையில் தனி அறை தயார் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவ பணிகள் இணை இயக்குநர் பழனிச்சாமி, சுகாதாரத்துறை துணை இயக்கநர் பாலுச்சாமி ஆகியோர் கூறுகையில், கொேரானா வைரஸ் நீலகிரிக்குள் வருவதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை.

காரணம், இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சீனாவில் இருந்து வரும் மக்கள், சுற்றுலா பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இது போன்ற சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இந்நோய் இந்தியாவிற்குள் பரவ எவ்வித வாய்ப்பும் இல்லை. எனவே, நீலகிரி மாவட்ட மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. இருந்த போதிலும், நீலகிரி மாவட்டம் சுற்றுலா நகரம் என்பதால், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவனைகளிலும் உள்ள மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருக்கவும், ஊட்டி மற்றும் கூடலூர் அரசு மருத்துவமனையில் தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளது, என்றனர்.

Related Stories: