அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனை

பந்தலூர், ஜன. 29:  பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சியில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பொன்தோஷ் தலைமையில் சிறப்பு ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. ஊராட்சி தலைவர் டெர்மிளா முன்னிலை வகித்தார். ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஊராட்சி பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்டவைகளை உடனடியாக ஊராட்சி பொது நிதி மூலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு மாவட்ட பஞ்சாயத்து மூலம் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களில் தினந்தோறும் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு அதனை நிவர்த்தி செய்ய உறுப்பினர்கள் முன்வரவேண்டும் என மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ராஜன், நெலாக்கோட்டை ஊராட்சி துணைத்தலைவர் நௌபல்ஹாரிஷ், கூடலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்குமாரமங்கலம், ஊராட்சி செயலாளர் சஜீத்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: