வெண்டைக்காய் கிலோ ரூ.50க்கு விற்பனை

திருப்பூர், ஜன.29: திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் வரத்து குறைவால் வெண்டைக்காய் கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு திருப்பூர் சுற்றூ வட்டார பகுதிகள், பல்லடம், பொங்கலூர், தாராபுரம், காங்கயம் பகுதிகளில் இருந்து நாள்தோறும் பல்வேறு காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இதில் தினசரி வெண்டைக்காய் சுமார் 1 டன் அளவுக்கு விற்பனைக்கு வந்து கொண்டிருந்தது. இதனால் ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ. 15க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது வெண்டைக்காய் சீசன் முடிந்து வரத்து குறைந்து விட்டது. இதனால், கடந்த சில நாட்களாக 500 கிலோவுக்கும் குறைவான அளவு வெண்டைக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் வெண்டைக்காய் நேற்று ரூ. 40க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று வெண்டைக்காய் கிலோ ரூ. 50க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வரத்து குறைந்துள்ளதால் இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறினர்.

Related Stories: