ஒன்றியக்குழு வார்டு பிரித்ததில் குளறுபடி

வானூர், ஜன. 29: வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் ஒன்றிய குழு வார்டு எல்லைகளை மறுசீரமைப்பு செய்ய வலியுறுத்தி கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். வானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் 12 சிற்றூராட்சி வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகள் அடங்கியதில் திருச்சிற்றம்பலம் கிராம ஊராட்சியும் 21 மற்றும் 27 ஒன்றியக்குழு வார்டும் உள்ளது. 21வது ஒன்றியக்குழுவில் 1 முதல் 7 வரை உள்ள சிற்றூராட்சி வார்டுகளும், 27வது ஒன்றியக்குழு வார்டில் 8 முதல் 12 வரையில் உள்ள 5 சிற்றூராட்சி வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 இதனால் 21வது ஒன்றியக்குழு வார்டில் 5844 வாக்காளர்களும், 27வது ஒன்றியக்குழு வார்டில் 3272 வாக்காளர்களும் உள்ளனர். தற்போது ஏற்படுத்தப்பட்ட சீரமைப்பில் ஒரே ஊராட்சியில் உள்ள 2 ஒன்றியக்குழு வார்டுகளில் வாக்காளர்கள் வித்தியாசம் அதிகம் உள்ளது. மேலும் சிற்றூராட்சியில் தலா 6 வார்டுகளை பிரித்து சமமான நிலையில் மறுசீரமைப்பு செய்து ஒன்றியக்குழு வார்டுகளை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கிராம சபையில் வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

Related Stories: