பாதாள சாக்கடை குழாய் உடைந்து சாலையில் தேங்கும் கழிவுநீர்

விழுப்புரம், ஜன. 29: விழுப்புரம் ராஜேஸ்வரி நகரில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நகர் வழியாக உள்ள சாலையில்தான் தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள், அலுவலகத்துக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் சென்று வருகின்றனர். தற்போது அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழாய் உடைந்து கழிவுநீர் வெளியேறுவதால் கிருஷ்ணா நகர், நாராயண நகர், திருகுமரன் நகர் ஆகிய நகர்களில் உள்ள சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லும் மாணவர்கள் கழிவுநீரில் விழுந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் இப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த பாதாள சாக்கடை குழாயை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: