பணி பயிற்சிக்காக ஜப்பான் செல்லும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள்

காரைக்கால், ஜன. 28:   பணி பயிற்சிக்காக 3 மாதம் ஜப்பான் செல்லும் காரைக்கால் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளை, கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் பாராட்டினார்.காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் மகளிர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில், ஆண்டுதோறும் நேர்காணல் நடத்தப்பட்டு  மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டு, சென்னையை சேர்ந்த பிரபல தனியார் நிறுவனம்  ஒன்று, தமிழகம், புதுச்சேரி அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களை பணிக்கு தேர்வு செய்யும் முகாம் அண்மையில் நடத்தியது. இதில்  தமிழகத்தில் 10 பேரும், காரைக்கால் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த 3 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் பிரிவை சேர்ந்த 2 பேர், இசிஇ பிரிவு மாணவி ஒருவர் என 3 பேர் வரும் ஜூலை மாதம் 2 வாரம் வியட்நாமுக்கும், 3 மாதங்கள் ஜப்பானுக்கும் பணி பயிற்சிக்கு நிறுவனம் ரூ.15 லட்சம் செலவில் அனுப்பி வைக்க உள்ளது. இந்த மாணவிகளை கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் பாராட்டினார். அப்போது, மாணவிகளின் பெற்றோர் மற்றும் கல்லூரி முதல்வர் பாபு அசோக், கல்லூரி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரி டெல்காஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: