இலவச அரிசி வழங்க கோரி 31ம் தேதி மக்கள் சந்திப்பு இயக்கம்

காரைக்கால், ஜன. 28:    இலவச அரிசி வழங்கக்கோரி வரும் 31ம் தேதி மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூ., அறிவித்துள்ளது.காரைக்காலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் துரைசாமி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் வின்சென்ட், வட்ட செயலாளர் தமீம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலியபெருமாள், திவ்யநாதன், ராமர், பாக்கியராஜ், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் வின்சென்ட் கூறும்போது, புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. நிறைவேற்றும் எண்ணம் இருப்பதாகவும் தெரியவில்லை. காரணம், ஆட்சி அதிகாரம் யாருக்கு என்பதில், கவர்னரும், முதல்வரும் போட்டி போட்டு கொண்டுள்ளனர். இதனால் மக்கள் நலத்திட்டம் முடங்கி கிடக்கிறது.

குறிப்பாக,

மாதாந்திர இலவச அரிசி வழங்கப்படாமல் வங்கியில் பணம் செலுத்தும் முறையால், மக்களுக்கு அரிசி கிடைப்பதில்லை. அதனால் மீண்டும் இலவச அரிசியை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,. வீட்டுக்கு ஒருவருக்கு வேலை அறிவித்தது போல், வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்பதை நிறைவேற்றப்பட வேண்டும். மாவட்டம் முழுவதும்  சீர்கெட்டு கிடக்கும் சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,  வரும் 31ம் தேதி காரைக்கால் மாவட்டம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த முடிவு செய்துள்ளோம்

என்றார்.

Related Stories: