பாலியல் குற்ற வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக நீதிமன்றம் அழைத்து வந்த கைதி ‘எஸ்கேப்’

திருவில்லிபுத்தூர், ஜன. 28: ராஜபாளையத்தை சேர்ந்தவர் வெனிஸ்குமார் (27). இவர் மீது பாலியல் குற்ற வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள போசோ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்கு வராமல் வெனிஸ்குமார் பலமுறை டிமிக்கி கொடுத்து வந்தார். இதனைதொடர்ந்து நீதிமன்றம் அவரை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்நிலையில் வெனிஸ்குமாரை ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் பிடித்து விசாரணைக்காக நேற்று மாலை திருவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.

இவரது வழக்கில் நீதிபதி உத்தரவு பிறப்பிக்கும் முன்னதாக கோர்ட்டிலிருந்து இயற்கை உபாதை கழிக்க போவதாக கூறிய வெனிஸ்குமார் மின்னல் வேகத்தில் வெளியே தப்பி ஓடினார். காவலர்களும், அங்கிருந்தவர்களும் அவரை பிடிக்க முயன்றபோது, மின்னல் வேகத்தில் வினோத்குமார் தப்பி ஓடிவிட்டார். இதுதொடர்பாக தகவல் கிடைத்தவுடன் சிறுவத்தூர் டிஎஸ்பி., ராஜேந்திரன் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் தப்பி ஓடிய வெனிஸ்குமாரை தேடி வருகின்றனர். வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடியதும், கைதியை போலீசார் விரட்டிச் சென்றதும் திருவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: