வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி செயலரை மாற்ற வேண்டும் கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் புகாரால் பரபரப்பு

வத்திராயிருப்பு,  ஜன. 28: வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி ஊராட்சி செயலரை மாற்றம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோாிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர் ராமுத்தாய் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, ஊராட்சி செயலர் சின்னமாரிமுத்து மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் புதுவாழ்வு திட்டத்தில் பயனாளிகளை உரிய முறையில் ஊராட்சி செயலர் தேர்வு செய்யவில்லை. அதோடு முறைகேடு செய்துள்ளதாக பொதுமக்கள் புகாராக தொிவித்தனர். அதோடு ஊராட்சி செயலரை மாற்றம் செய்யவேண்டுமெனவும் தெரிவித்தனர். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலரை மாற்றம் செய்து விடுவதாக கூறினார்.

அதோடு மகாராஜபுரம் ஊராட்சி செயலரால் குடியரசு தினவிழா  சிறப்பு மகாசபை கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் இனம்வாாியாக செலவு விபரங்கள் தாக்கல் செய்யப்படாத காரணத்தால் 06.01.2020 தேதிக்கு முன்பு வரை அனைத்து தீர்மானங்களும் பொதுமக்களின் சார்பாக நிராகரிக்கப்படுகிறது என்ற தீர்மானத்தை தீர்மான நோட்டில் பதிவு செய்யவேண்டுமென பொதுமக்கள் கோாிக்கை விடுத்தனர். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தீர்மானங்களை ரத்து செய்வதற்கு எனக்கு அதிகாரம் இல்லை. அனைத்தும் மாவட்ட கலெக்டருக்கு மட்டுமே உண்டு. இதனால் தீர்மான நோட்டில் பதிவு செய்ய மாட்டேன் என்று கூறினார். இதற்கிடையில் காவல் துறையினர் தலையிட்டு அதிகாாி சொல்லிவிட்டதால் அனைவரும் கிளம்பி செல்லுங்கள் என்று கூறினர். இதனையடுத்து ஒவ்வொருவராக கலைந்து சென்றனர். கிராம சபைக்கூட்டம் நடந்தபோது 11 மணியில் இருந்து 2 மணி வரை தொடர்ந்து அதிகாரிகளுடன்  பொதுமக்கள் காரசார விவாதங்கள் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.

Related Stories: