காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கபட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும்

சீர்காழி, ஜன. 27: காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென காவிரிப்பூம்பட்டினம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சீர்காழி அருகே காவிரிபூம்பட்டினம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் சசிக்குமார் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அதிகாரி மணிமாறன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் கண்ணன் வரவேற்றார். கிராமசபை கூட்டத்தில், காவிரி டெல்டா பகுதிகளில் ஷேல் கேஸ், மீத்தேன் எரிவாயுத்திட்டம், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை விவசாயிகளின் நலன்கருதி அமல்படுத்தக்கூடாது என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றபட்டது. மேலும் தீர்மானத்தில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கபட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டுமென வலியுறுத்தப்பட்டது. கிராமசபை கூட்டத்தில், வார்டு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தூய்மைபணியாளர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: