பெண் குழந்தை பாதுகாப்பு மாரத்தான்

கமுதி, ஜன.28: கமுதி அருகே பேரையூரில் கல்லூரி மாணவர்களின் மாரத்தான் ஓட்ட பந்தயம் நடைபெற்றது. கமுதி அருகே பேரையூரில் உள்ள நம்மாழ்வார் விவசாய தொழில்நுட்ப கல்லூரி சார்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி வழங்குதல் ஆகியவற்றை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம் பந்தயம், பேரையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து கல்லூரி வரை நடைபெற்றது. கல்லூரியின் சேர்மன் அகமதுயாசின் தலைமை வகித்தார். பேரையூர் சப்.இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன், ஊராட்சி மன்ற தலைவர் ரூபி ஆகியோர் கொடியசைத்து மாரத்தான் ஓட்டப் பந்தயத்தை துவக்கி வைத்தனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர் இதில் கலந்து கொண்டனர்.

Related Stories: