தேசிய மல்யுத்தம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு

சாயல்குடி, ஜன.28:  தேசிய அளவில் நடந்த மல்யுத்தம் போட்டியில் முதுகுளத்தூர் மாணவர் வெங்கல பதக்கம் பெற்றார். அவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. திருச்சியில் தேசிய அளவிலான கிராப்ளிங்(மல்யுத்தம்) போட்டிக்கு தகுதி தேர்வு நடந்தது. 17 வயதிற்குபட்ட மாணவர்கள் கலந்து கொண்ட போட்டியில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜமாலுதீன் கலந்து கொண்டு வெற்றி பெற்று தகுதி தேர்விற்கு தேர்வானார். இவர் டெல்லியில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெங்கல பதக்கம் பெற்றார். தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் சீனிமுகம்மது தலைமை வகித்தார். கல்விகுழு தலைவர் பாசீல்அமீன், ஜமாத் தலைவர் இக்பால் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் முகம்மது சுலைமான் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாணவர் ஜமாலுதீன், உடற்கல்வி ஆசிரியர்கள் கமால்பாட்ஷர், அன்சாரி, உசேன் ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம், பெற்றோர் சார்பில் பாராட்டி சான்றுகள், கோப்பைகள் வழங்கப்பட்டது. மாணவர் ஜாமலுதீன் கூறும்போது, பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தால் தேசிய அளவில் நடந்த கிராப்ளிங் போட்டியில் கலந்து தற்போது வெங்கலம் பதக்கம் பெற்றுள்ளேன், அடுத்த முறை சிறப்பாக விளையாடி தங்கப்பதக்கம் வென்று, இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்ப்பேன் என்றார்.

Related Stories: