பழைய வத்தலக்குண்டுவில் அழகு மலையான் ேகாயில் கும்பாபிஷேகம் ஏராளமானோர் பங்கேற்பு

வத்தலக்குண்டு, ஜன. 28: பழைய வத்தலக்குண்டுவில் அழகு மலையான் கோயிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டுவில்  அழகு மலையான் கோயில் உள்ளது. இங்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக திருப்பணிகள் நடந்து வந்தன. பணிகள் முடிந்த நிலையில் நேற்று கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடந்தது. முன்னதாக பெரிய பூசாமி கொடுமுடி, சுருளி, அழகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீருக்கு கலச பூஜை நடத்தினார். பின்னர் புனித நீர் கோயில் கோபுர கலசம் மீது ஊற்றப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம நிர்வாக அலுவலர் செல்வகணபதி, நூலகர் கருப்பையா மற்றும் கமிட்டியினர் செய்திருந்தனர்.

Related Stories: