துணைவேந்தர் தாஸ் பேச்சு தினமும் 400 கிராம் பழம், காய்கறிகள் சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம்

நீடாமங்கலம்,ஜன.28: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து மதிப்பூட்டபட்ட உணவுப் பொருட்கள் தயாரித்தல் குறித்த தொழில்நுட்ப பயிற்சி இரண்டு நாட்கள் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்ரமணியன் தலைமையில் நடந்தது. பயிற்சியில் நிலைய உணவியல்துறை பயிற்சி உதவியாளர் வனிதா பேசுகையில் பழங்கள் காய் கறிகளிலில் அதிகளவு வைட்டமின் தாது உப்புகள் மற்றும் நார்ச்சத்து காணப்படுகிறது. இவைகள் அனைத்தும் மனித உடலுக்கு மிகவும் இன்றியமையாதது.உலக சுகாதார நிறுவனம் ஆணைபடி ஒரு நாளைக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் 400 கிராம் நாம் உட்கொண்டால் இருதய நோய் ,புற்று நோய்,நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் போன்ற நோய்கள் ஏற்படாமல் நமது உடலை ஆரோக்கியமாக காத்துக்கொள்ளலாம்.சிவப்பு நிற பழங்கள் இருதய நோய் மற்றும் ரத்த உறைதலை தடுக்க உதவுகிறது. வைட்டமின் ஏ கண் பார்வைக்கு முக்கியமானது.

மாலைக்கண் நோய் கண்ணில் புறைவிழுதல்,பார்வை மங்குதல் போன்றவை வைட்டமின் ஏ குறைபாடுகளாகும்.ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற காய்கறி , பழங்கள் வைட்டமின் ஏ அதிகம் காணப்படுகிறது.வைட்டமின் சி மற்றும் போலிக் அமிலம் அதிகளவு பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகிறது. கிராமங்களில் கிடைக்கும் 100 கிராம் சுரைக்காயில் 96 சதம் நீர்,0.5 சதம் தாது உப்புகளும்,0.6 சதம் நார்ச்சத்தும்,2.5 சதம் மாவு சத்தும் காணப்படுகிறது. இதனால் உடல் சூட்டை தணிக்கும்.உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். பித்தத்தை குறைக்கும்.நோய் தடுப்புசக்தியையும்,நோயிலிருந்து காப்பவையும் வைட்டமின் மற்றும் தாது உப்புகளே என்றார்.பழங்களிலிருந்து பழப்பிசின் ,அன்னாசிப்பழ ஸ்குவாஷ்,நெல்லிக்காய் ஊறுக்காய் மற்றும் காய்கறிகளிலிருந்து கட்லெட் உணவுப்பொருள்கள் தயாரித்து காண்பிக்கப்ட்டது.பூச்சியியல்துறை உதவி பேராசிரியர் ரமேஷ்,மண்ணியல்துறை அனுராதா, நிலைய தொழில்நுட்ப உதவியாளர் ரேகா மற்றும் விஜயலட்சுமி கலந்து கொண்டனர்.

Related Stories: