நீடாமங்கலம் செயின்ட் ஜீட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா

நீடாமங்கலம்,ஜன.28: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் செயின்ட் ஜீட்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் 71வது குடியரசு தினவிழா மற்றும் 36வது விளையாட்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் ராஜகோபால் தலைமையில் நடந்தது. பள்ளி தாளாளர் நடராஜன்,நிர்வாக இயக்குனர் விக்னேஷ் முன்னிலை வகித்தனர்.பள்ளி செயலாளர் அநிரூபிதா அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வட்டார கல்வி அலுவலர் செல்வம் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். ஓய்வு பெற்ற ஆசிரியர் சேதுரத்தினம், பத்மநாபன்,மனோகர் உள்ளிட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.கராத்தே மற்றும் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வட்டார கல்வி அலுவலர் செல்வம் வழங்கிபாராட்டினார்.பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.பள்ளி முதல்வர் செல்வம் நன்றி கூறினார்.

Related Stories: