விவசாயிகள் முடிவு மாதாக்கோட்டை கிராமத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி வழங்க வேண்டும்

தஞ்சை, ஜன. 28: மாதாக்கோட்டை கிராமத்தில் பிப்ரவரி 22ம் தேதி பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்க வேண்டுமென தஞ்சையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கோவிந்தராவ் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்தார். தஞ்சை மாதாக்கோட்டை கிராம பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவை அளித்த மனுவில், கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நாஞ்கிக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மாதாக்கோட்டை கிராமத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விழாவை சிறப்பாக நடத்தி வருகிறோம். இந்தாண்டும் பிப்ரவரி 22ம் தேதி சிறப்பாக நடத்த ஊர் பெரியோர்கள், பொதுமக்கள், ஜல்லிக்கட்டு பேரவையினர் முடிவு செய்துள்ளோம். எனவே பாரம்பரிய ஜல்லிக்கட்டு விழாவை நடத்த உரிய அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: