புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகம் இடமாற்றம்

புதுக்கோட்டை, ஜன.28: புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகம் தற்காலிகமாக பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக வருவாய்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு பொது அலுவலக வளாகத்தை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகமாக மாற்றப்பட்டு வருவதால், நீதிமன்றம் அல்லாத தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட பிற அலுவலகங்களை வேறு இடங்களுக்கு மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து அரசு பொது அலுவலக வளாகத்தில் இயங்கி வந்த இந்துசமய அறநிலையத்துறை போன்ற அலுவலகங்கள் ஏற்கெனவே வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில் தாசில்தார் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் வேறு இடத்தில் கட்டப்பட்டு வருவதால், அதுவரை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக வருவாய்த்துறை அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.

Related Stories: