தீ பற்ற வைத்ததால் 2 நாளாக எரிந்து புகைமண்டலத்தை உருவாக்கிய நகராட்சி குப்பை கிடங்கு

பெரமபலூர், ஜன.28: பெரம்பலூர் நகராட்சி இர ண்டாம் நிலை அந்தஸ்து கொண்ட நகராட்சி ஆகும். பெரம்பலூர், துறைமங்க லம், அரனாரை பகுதிகளை உள்ளடக்கிய இந்த நகராட் சியில் 21 வார்டுகள் உள்ள ன. இந்த நகராட்சிக்கான குப்பைக் கிடங்கு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ் சாலையில் துறைமங்கலம் அருகே நெடுவாசல் பிரிவு ரோடு பகுதியில்உள்ளது. 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குப்பைக் கிடங்கில் பாதாள சாக்கடை திட்டத்தி ற்காக ரூ3கோடியில் கட்டப் பட்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையமும் ஒரு பகுதியில் உள்ளது. பெரம்பலூர் நகராட்சியிலிருந்து துப்புரவு பணியாளர்கள் மூலம் வாக னங்களில் சேகரித்துக்கொ ண்டுவரப்படும் குப்பைகள் கடந்த ஆறேழு வருடங்களா க இப்பகுதியில்தான் ம லைபோல் குவிக்கப்பட்டுள் ளன. ஏறக்குறைய 2000 டன்னுக்கு மேல் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் இங்குள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் சார் பாக நகராட்சி குப்பைமேட் டில் குவிந்து கிடக்கும் குப்பைகளை, ஒதரம்பிரித்து மக் காத குப்பைகளை சேகரி க்க டெண்டர்விடப்பட்டு அத ற்காக ஒரு யூனிட் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 26ம் தேதி (ஞாயிறு)காலையில் அப் பகுதிக்குச்சென்ற யாரோ ஒருவர் விஷமத்தனமாக குப்பை கிடங்கில் தீ வைத்துள்ளார். அது 26 ஆம்தேதி நாள்முழுவதும் எரிந்துகொ ண்டிருந்தது. இதுபற்றி தக வலறிந்த நகராட்சி ஆணை யர் (பொ) தாண்டவமூர்த்தி உத்தரவின்பேரில், சுகாதா ர ஆய்வாளர்கள் கணேசன் பன்னீர்செல்வம்,பணிமேற் பார்வையாளர்கள் மற்றும் துப்புரவு பணி யாளர்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்தனர். நேற்று காலையும் கடுமையான புகை மூட்டம் காணப்பட்ட தால்அதிகாலைபனியோடு சேர்ந்து அருகே நிற்கும் ஆளே தெரியாதபடிக்கு அட ர்த்தியான புகை மண்டல மாகக் காணப்பட்டது.

இதனால் அருகில் உள்ள தனியார் பள்ளி வளாகம், தேசிய நெடுஞ்சாலை ஓர த்திலுள்ள அரசுப் போக்கு வரத்துக்கழக டிரைவர், க ண்டக்டர்கள் குடியிருக்கும் தீரன் நகர் குடியிருப்புப் ப குதிஆகியவற்றை புகை சூழ்ந்ததால் அனைவருக் கும் மூச்சுத் திணறல் ஏற்ப ட்டது.அதோடு பலவருடகழி வுகளின் துர் நாற்றம் வீசி யதால் சுவாசிக்க முடியா மல் பலரும்திணறினர்.இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பெரம்பலூர் தீயணைப்புத் துறையினர் நேற்று பல மணி நேரங்கள் போராடி குப்பைக் கிடங்கி ல் தீயைஅணைக்க முற்பட் டனர். மதியத்திற்கு பிறகு எரிந் துகொண்டிருந்த தீயைமட் டும் அணைத்துவிட்டுச் செ ன்றனர். இருந்தும் குப்பை மேடுகளில் தரை வரைக் கும் ஊடுருவிச் சென்ற நெ ருப்பு தொடர்ந்து கனிந்து கொண்டிருப்பதாலும், மீத் தேன் வாயு கசிவதாலும், பல இடங்களில் சிறுசிறு துவாரங்கள்வழியாக புகை வந்தபடியே உள்ளது. இத னால் தீஅருகிலுள்ள வயல் களில் பரவாமல் இருக்க நகராட்சி நிர்வாகம் உத்திர வாதம் அளிக்கவேண்டுமெ ன விவசாயிகள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்ப ட்டுள்ளது.

Related Stories: