தெரணி ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டும்

பாடாலூர், ஜன. 28: ஆலத்தூர் தாலுகா தெரணி ஊராட்சியில் உள்ள ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டுமென கிராமசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆலத்தூர் தாலுகா தெரணி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் பங்கேற்று கோரிக்கை மனுக்களை பெற்று பேசினார். கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆழப்படுத்தி கரையை பலப்படுத்த வேண்டும். தெரணியில் இருந்து திருவளக்குறிச்சி, இரூர், தெரணிபாளையம் கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த கோரிக்கைகள் கிராமசபை கூட்டத்தில் தீர்மானமான நிறைவேற்றப்பட்டது. ஆலத்தூர் தாசில்தார் ஷாஜகான், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கிருஷ்ணராஜ், வட்ட வழங்கல் அலுவலர் பாக்கியராஜ், கொளக்காநத்தம் வருவாய் அலுவலர் சிரில்சுதன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி, கிராம நிர்வாக அலுவலர் நல்லுசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வி, ஊராட்சி செயலாளர் சிவக்குமார் பங்கேற்றனர்.

Related Stories: