கலெக்டர் அலுவலகத்தில் மனு ஓபிசியில் உட்பிரிவு செய்து சீர் மரபினருக்கு 9 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்

கரூர், ஜன. 28: ஓபிசியில் உட்பிரிவு செய்து சீர் மரபினருக்கு 9 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் நலச்சங்க நிர்வாகிகள் மனு கொடுத்தனர். கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சீர் மரபினர் நலச்சங்க குணசேகரன், ராக்கி முருகேசன் உள்ளிட்டோர் அளித்த மனு: சீரமரபினருக்கு பல ஆணையங்கள் பரிந்துரைகளை சமர்ப்பித்தும் அனைத்தும் கனவாகவே இருந்த நிலையில் 2015ல் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைப்படி ஓபிசி இடஒதுக்கீட்டில் உட்பிரிவு செய்து 9 சதவீத இடஒதுக்கீடு வழங்க உறுதியளித்தது. ஆனால் இதற்கான ஆணையத்திற்கு கால அவகாசம் தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது. 48 மணிநேரத்தில் முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி சட்டம் கொண்டு வந்து நாடு முழுவதும் கொண்டு வந்த அரசு 75 ஆண்டுகளாக சீர்மரபினர் மக்களுக்கு மட்டும் போக்கு காட்டி வருவது பெரும்பாவம். இதுபோன்று இன்னும் எண்ணற்ற காரணங்கள் இருக்கிறது. எனவே இடஒதுக்கீடு உடனே வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்க கரூர் மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ஓய்வூதியர்கள் அளித்த மனு:

கரூர் மாவடட்த்தில் உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மாத ஓய்வூதிம் வழங்க அரசு உத்தரவு, ஆட்சியர் அறிவுரை இருந்தும் 3 மாதங்களுக்கு ஒருமுறை தவணை முறையில் வழங்கப்படுகிறது. ஓய்வூதியம், போனஸ் வழங்கவில்லை. கடந்த ஆண்டுக்கான பொங்கல் போனஸ், கருணைதொகை கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, கடவூர் வட்டார ஊட்டசத்து மையங்களில் இன்னும் வழங்கப்படவில்லை. உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு ஒய்வுபெற்ற ஒரு மாதத்திற்குள் ஓய்வூதிய பலன்கள் வழங்க அரசு உத்தரவு இருந்தும், சிறப்புசேமநல நிதி மற்றும் ஜிபிஎப், ஆண்டுக்கணக்கில் வழங்கவில்லை. இவற்றை அனைத்து ஒன்றியங்கள், ஊட்டசத்து வட்டாரங்களில் உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாணைப்படி ஓய்வுபெற்ற 30 ஆண்டு முடித்த ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். மாயனூர் வட்டார மாட்டு வண்டி சங்கம் சார்பில் அளித்த மனுவில், சங்கத்தில் 300க்கும் அதிகமான நபர்கள் உறுப்பினராக உள்ளனர். மாயனூர் காவிரியாற்றில் அரசு அனுமதியோடு மணல் எடுத்து பொதுமக்கள் மற்றும் அரசு கட்டுமான பணிகளுக்கு விற்பனை செய்து வந்தோம். இந்நிலையில் மணல்எடுக்க கூடாது என அதிகாரிகள் தடுத்து விட்டனர். எனவே விதிகளுக்கு உட்பட்டு கிராம சொந்த தேவைக்காக மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: