சாலை பாதுகாப்பு வாரம் நிறைவு ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி

ஊட்டி,ஜன.28: சாலை பாதுகாப்பு வார நிறைவு நாளை முன்னிட்டு நேற்று வட்டார போக்குவரத்து துறை சார்பில் ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.போக்குவரத்து துறை சார்பில், கடந்த 20ம் தேதி சாலை பாதுகாப்பு வார விழா துவங்கியது. தொடர்ந்து  இலவச மருத்துவ உடல் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை முகாம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஓவியம், பேச்சு, சிறந்த சாலை பாதுகாப்பு வாசகம் எழுதும் போட்டிகள், போக்குவரத்து விதிமுறைகள் குறித்த சிறப்பு நிகழ்ச்சி, சிறப்பு வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், சாலை பாதுகாப்பு விழா நேற்றுடன் நிறைவடைந்தது. இதை தொடர்ந்து ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஊட்டியில் ெஹல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி மற்றும் நடை பேரணி நடந்தது. மத்திய பஸ் நிலையம் அருகே துவங்கிய பேரணியை வட்டார போக்குவரத்து அலுவலர் கதிரவன் துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் ேபசுகையில், ‘வாகனங்கள் இயக்கும் போது அதிக வேகத்தை தவிர்க்க வேண்டும். எதிர்ப்புறம் வண்டி வரும் போது முந்தி செல்ல கூடாது.

நான்கு புறமும் எரியும் இன்டிகேட்டர்களை வாகனம் இயங்கும் போது உபயோகம் செய்ய கூடாது. போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். பிரதான சாலையில் நுழையும் போது வாகனத்தை நிறுத்தி இருபுறமும் பார்த்து வாகனங்கள் ஏதுவும் வரவில்லை என உறுதி செய்த பின்னரே நுழைய வேண்டும். களைப்பு, உறக்கம், சோர்வு ஏற்படும் போது கண்டிப்பாக வாகனம் ஓட்ட கூடாது. முக்கியமாக ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும், என்றார்.  விழிப்புணர்வு பேரணி சேரிங்கிராசில் முடிவடைந்தது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இதில் ேபாக்குவரத்து ஆய்வாளர்கள் குலோத்துங்கன், நல்லதம்பி, அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: