பள்ளி மாணவர்கள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு வட்டார கல்வி அலுவலர் பாராட்டு

கலசப்பாக்கம், ஜன.28: பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களை வட்டார கல்வி அலுவலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். துரிஞ்சாபுரம் ஒன்றியம் வி.நம்மியந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கை குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் இப்பள்ளியை சேர்ந்த 45 மாணவர்கள் பங்கேற்று பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து கலை நிகழ்ச்சி மூலம் விளக்கினர்.

இவர்களை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பாராட்டி சான்றிதழ் வழங்கினார். அதேபோல், துரிஞ்சாபுரம் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் நேற்று பள்ளிக்கு சென்று கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இதில், பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து துரிஞ்சாபுரம் ஒன்றியம் கொத்தந்தவாடி டி.எம். துவக்கப்பள்ளியில் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: