ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 100 முதுகலை ஆசிரியர்களுக்கு வேறு பள்ளியில் ஒரு நாள் மாற்றுப்பணி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

வேலூர், ஜன.24: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த சுற்றறிக்கையில், ‘வேலூர் மாவட்டத்தில் 2019-2020ம் கல்வி ஆண்டில் மேல்நிலைப்பள்ளிகளில் பொதுத்தேர்வு பிளஸ்1, பிளஸ்2, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அவர்களுக்கு எதிரே உள்ள பள்ளியில் வாரம் ஒருநாள் மட்டும் மாற்று பள்ளியில் பணிபுரிய ஆணை வழங்கப்படுகிறது. மாற்றுப்பணிக்கு ஏற்ப கால அட்டவணை தயார் செய்து வைத்திட அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 100 முதுகலை ஆசிரியர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் மாற்று பள்ளியில் மாற்றுவதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது

Related Stories: