நகராட்சி அலுவலகங்களில் மகளிருக்கு செக்யூரிட்டி பணி

புதுச்சேரி, டிச. 5:  உழவர்கரை நகராட்சி, தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஜவகர் நகர், மேரி உழவர்கரை மற்றும் விவிபி நகர் ஆகிய இடங்களில் செயல்படும் உழவர்கரை நகராட்சி அலுவலக தினசரி தூய்மைப்படுத்தும் பணியினை 3 சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் 5 மகளிர் பயன் பெறுகின்றனர். இப்பணியினை இவர்கள் ஒரு மாதமாக சிறப்பாக செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக மேற்படி மூன்று அலுவலகங்களுக்கும் பாதுகாவல் பணியினை வசந்தம் தாமரை பகுதி நிலை கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆணையை நகராட்சி ஆணையர் கந்தசாமி முன்னிலையில் உள்ளாட்சித்துறை இயக்குனரும், புதுச்சேரி மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனருமான மலர்க்கண்ணன் வழங்கினார். அதனை வசந்தம் தாமரை பகுதி நிலைய கூட்டமைப்பு தலைவி கல்பனா பெற்றுக் கொண்டார். இதன் மூலம் 17 மகளிர் பயன்பெற உள்ளனர்.

Related Stories: