கல்வராயன்மலை தாலுகாவின் முதல் தாசில்தார் பொறுப்பேற்பு

சின்னசேலம், டிச. 5: கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டதையடுத்து சின்னசேலம் தாலுகாவை பிரித்து கல்வராயன்மலை புதிய தாலுகாவாக உருவாக்கப்பட்டது. இந்த கல்வராயன்மலையில் வெள்ளிமலை, சேராப்பட்டு ஆகிய இரு குறுவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் 44 கிராமங்கள் உள்ளது. இதையடுத்து கல்வராயன்மலையில் தனிவட்டாட்சியராக இருந்த நடராஜன் பணி மாறுதல் பெற்று தாசில்தாராக பதவியேற்றார். இதையடுத்து அவருக்கு மண்டல தாசில்தார், தனி தாசில்தார், குறுவட்ட ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதையடுத்து சங்கராபுரத்தில் துணை தாசில்தாராக பணியாற்றிய சங்கரநாராயணன் பதவி உயர்வு பெற்று கல்வராயன்மலையின் தனி தாசில்தாராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: