திருவில்லி.யில் தொடர்மழையால் வெங்காய சாகுபடி பாதிப்பு

திருவில்லிபுத்தூர், டிச. 5: திருவில்லிபுத்தூர் பகுதியில் தொடர்மழையால், பாதிக்கப்பட்ட வெங்காய சாகுபடியை எம்.எல்.ஏ எம்.எல்.ஏ ஆய்வு

செய்தனர். திருவில்லிபுத்தூர் பகுதியில் பிள்ளையார் நத்தம், மேலத்தொட்டியபட்டி பூவாணி ஆகிய பகுதியில் வெங்காய சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு அறுவடை செய்யப்படும் வெங்காயத்தை, தென்மாவட்டங்களில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு அனுப்பப்படும். இந்நிலையில், திருவில்லிப்புத்தூர் பகுதியில் தொடர் மழை காரணமாக  பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த வெங்காயங்கள் அழுகி பாதிப்படைந்துள்ளது. இதனால், ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் வரை செலவு செய்த, விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இந்நிலையில்,

மேலத்தொட்டியபட்டி கிராமத்தில் வெங்காய சாகுபடி பாதிப்பு குறித்து, கலெக்டர் கண்ணன், அதிமுக எம்.எல்.ஏ சந்திரபிரபா முத்தையா மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள், வெங்காய சாகுபடி பாதிப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: