போக்குவரத்துக்கு வாகன ஓட்டிகள் அவதி திருவில்லி.யில் மணல் பறிமுதல்

திருவில்லிபுத்தூர், டிச.5: திருவில்லிபுத்தூர் ஓட்டமடம் பகுதியில் மணல் குவிக்கப்பட்டு இருப்பதாக, தாசில்தார் கிருஷ்ணவேணிக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் தாசில்தார் கிருஷ்ணவேணி, வருவாய் ஆய்வாளர் பால்துரை மற்றும் வருவாய்த்துறையினர் சோதனை செய்தனர். அப்போது ஓட்டமடம் பகுதியில் மணல் குவியல், குவியலாக குவித்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மணல் குவியலை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகம் கொண்டு வந்தனர்.

இது குறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், ‘பறிமுதல் செய்யப்பட்ட மணல் 12 யூனிட். இந்த மணலை யார் கொண்டு வந்து இப்பகுதியில் குவித்து வைத்துள்ளனர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

Related Stories: