தப்புக்குண்டுவில் சரியான வளர்ச்சி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்தும் கிராம ஊராட்சிகளில் ஆர்வம் குறைவு

தேவாரம், டிச.5: உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்தும் கிராம ஊராட்சிகளில் ஆர்வம் இல்லாத நிலையே தொடர்கிறது. தமிழகத்தில் கிராம ஊராட்சிகள், மாவட்ட கவுன்சிலர்கள், வார்டு கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்களுக்கான தேர்தல் டிச.27 மற்றும் 30ந்தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தை பொறுத்தவரை உத்தமபாளையம், போடி, கம்பம், சின்னமனூர், கடமலை - மயிலை உள்ளிட்ட 8 ஒன்றியங்களில் 130 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல் பணிகள் நடந்தன. இதில் வாக்காளர்களை வார்டுவாரியாக பிரித்தல், மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை, ஆண், பெண் வாக்காளர்கள், புதிதாக சேர்ந்துள்ள வாக்காளர்களை வார்டுகளுக்கு சென்று சேர்த்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தன. தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் பற்றி உயர்நீதிமன்றங்களில் அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதால் தேர்தல் நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகம் அதிகளவில் கட்சியினர் மத்தியில் உண்டாகி உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `` தமிழக தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்துள்ளது. ஆனாலும், கிராம ஊராட்சிகள், மற்றும் ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள் பதவியிடங்களுக்கு தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. காரணம் அதிகளவில் தேர்தல் பற்றி நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகிறது. இதனால் கிராமங்களில் சுறு சுறுப்பில்லாத நிலை உள்ளது’’ என்றனர்.

Related Stories: