திருச்செங்கோடு அருகே பிளாஸ்டிக், ரசாயன கழிவுகளை எரிப்பதால் பொது மக்கள் அவதி

திருச்செங்கோடு, டிச.5: திருச்செங்கோடு அருகே பிளாஸ்டிக் மற்றும் ரசாயன கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பதால் எழும் கடும் புகை மூட்டத்தால் அப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். திருச்செங்கோடு அருகே உள்ளது சத்திய நாயக்கன்பாளையம். இக்கிராமத்தில் உள்ள ஏரி வறண்டு தண்ணீர் இல்லாமல் காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் இந்த ஏரியில் ரசாயன கழிவுகள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் கோழிக்கழிவுகளை இரவு நேரத்தில் லாரிகளில் கொண்டு வந்து குவித்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில், நேற்று  சிலர் இந்த குப்பை கழிவுகளுக்கு தீ வைத்து விட்டு சென்றனர்.

இதில் பற்றி எரிந்த தீயால் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து வெளியேறி புகை ஊர் முழுவதும் பரவியது. இதில் புகையின் நெடி தாங்காமல் மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல், இருமல் போன்ற பல்வேறு பிரச்னைகளால் மக்கள் அவதிக்குள்ளாயினர். இதில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களில் வயதானவர்களும், குழந்தைகள் அடங்குவர். ஏரியில் குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தீ வைப்பவர்களைக் கண்டறிந்து தண்அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: