மாலையில் உள்ளாட்சியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு செய்தவர்களிடம் பெரியகுளத்தில் நேர்காணல்

பெரியகுளம், டிச.5: பெரியகுளம் பகுதியில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியம், மாவட்ட கவுன்சிலர் தேர்தல் டிச.27 மற்றும் 30ந்தேதிகளில் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட மனு செய்தவர்களிடம் பெரியகுளத்தில் நேர்காணல் நடைபெற்றது. தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு விருப்பமனு அளித்த திமுக நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் அவர்கள் கட்சியில் சேர்ந்த வருடம், வகிக்கும் பொறுப்பு , கட்சி பணிகளில் இதுவரை அவர்கள் கொண்டுள்ள பங்கு ஆகியன குறித்த விபரங்களை சேகரித்தார்.

இந்த விபரங்களை திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஒப்படைத்து அவர்களில் முறையானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்தலில் நிறுத்தப்படுவார்கள் என்றார். நிகழ்ச்சியில் பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார், நகர செயலாளர் முரளி, ஒன்றிய செயலாளர் எல்.எம்.பாண்டியன், மாவட்ட பொருளாளர் அருணா சேகர், தலைமை செயற்குழு உறுப்பினர் குருஇளங்கோ மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: