வையப்பமலை கவிதாஸ் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருச்செங்கோடு, டிச.5: வையப்பமலை கவிதாஸ் கலைஅறிவியல் கல்லூரியில், மகளிர் மேம்பாட்டு மையம் சார்பாக பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய வாழ்வு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். கல்லூரி தலைவர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக செயலாளர் கவிதா செந்தில்குமார் மற்றும் கணினி அறிவியல் துறை பேராசிரியை ராதிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

துணை முதல்வர் வினோத்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் விஜயகுமார், மாணவிகள் சமுதாயத்தில் தங்களின் பொறுப்பை உணர்ந்து வீட்டிற்கும் நாட்டிற்கும் சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும் என வாழ்த்தி பேசினார். தாளாளர் செந்தில்குமார் பேசுகையில், பெண்கள் மேம்பாட்டு மையம் கல்லூரியில் நிறுவுவதற்கான அவசியம் பற்றியும், பெண்களின் முன்னேற்றம் பற்றி எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினர் கவிதா செந்தில்குமார், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சிறுதொழில் குறித்து மாணவிகளிடம் கலந்துரையாடினார். மேலும், இயற்கை உணவு முறை பற்றியும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய பாரம்பரிய உணவு முறைகள் பற்றியும் எடுத்துரைத்தார். ஆங்கிலத் துறை உதவி பேராசிரியை  நிவிப்ரியா நன்றி கூறினார்.

Related Stories: