அடிக்கடி தீ விபத்து தீயணைப்பு நிலையம் வேண்டும்

தொண்டி, டிச.5: தொண்டியை மையமாக வைத்து ஏராளமான கிராம பகுதிகள் இருப்பதால், அடிக்கடி தீவிபத்துகள் நடைபெறுகிறது. இதற்கு திருவாடானையில் இருந்துதான் தீயணைப்பு வீரர்கள் வரவேண்டியிருக்கிறது. இதனால் தொண்டியில் தீயணைப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் நகர் பகுதியாகும். தொண்டியை மையமாக வைத்து 50க்கும் மேறபட்ட கிராம பகுதிகள் உள்ளது. விவசாயிகள் அதிகமாக வாழும் இப்பகுதியில் தீ விபத்துகள் அதிகம் நடக்கிறது. மேலும் கடற்கரை பகுதி என்பதால் பேரிடர்களும் நடக்கிறது.

விபத்து ஏற்படும் காலங்களில் தீயணைப்பை அழைக்கும் பட்சத்தில் தொண்டியிலிருந்து 15 கி.மீட்டர் தூரம் உள்ள திருவாடானையில் இருந்து வருவதற்குள் சேதம் அதிகமாகிறது. இதனால் தொண்டியில் தீயணைப்பு நிலையம் அமைத்தால் பொருள் சேதத்தை முற்றிலுமாக தவிர்க்கலாம். அதனால் தொண்டியில் தீயணைப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியது, தொண்டி, நம்புதாளை, சோலியக்குடி, லாஞ்சியடி உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி தீ விபத்தகள் நடக்கிறது. இதற்கு தீயணைப்பு வீரர்கள் திருவாடானையில் இருந்து வருவதால் காலதாமதம் ஏற்பட்டு பொருள்கள் எரிந்து நாசமாகி விடுகிறது. அதனால் தொண்டியில் தீயணைப்பு நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: