சூளகிரியில் சிதிலமடைந்து கிடக்கும் காவலர் குடியிருப்பு

சூளகிரி, நவ.5:  சூளகிரியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய காவலர் குடியிப்புகள் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. இதை சீரமைத்து தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சூளகிரி தாலுகா பேரிகை செல்லும் சாலை கீழ் தெருவில், ஆங்கிலேயேர் ஆட்சி காலத்தில் காவல் நிலையம் கட்டப்பட்டது. அப்போதைய முறையில் ஓட்டு கட்டிடத்தில் போலீஸ் ஸ்டேஷன் கட்டப்பட்டது. இதை தொடர்ந்து காவலர்கள் தங்க அப்போது குடியிருப்பு என 10 வீடுகள் கட்டப்பட்டது. இதுவும் அப்போதைய முறைபடி ஓட்டு வீடாக கட்டப்பட்டது. தற்போது 70 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த கட்டிடங்கள் யாவும் ஓடுகள் பெயர்ந்தும், கட்டடத்தில் விரிசல் விட்டும் காணப்படுகிறது. மேலும் மழை வந்தால் தண்ணீர் வடிந்து சுவர்கள் ஈரமாக காணப்படுகிறது. மேலும் குடியிருப்புகளை சுற்றி செடி, கொடிகள் என முட்புதர்கள் மண்டி காணப்படுகிறது. மேலும் கொசு தொல்லை, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அதிகம் காணப்பட்டது.இது குறித்து குடியிருப்புகளில் தங்கி உள்ள காவலர்கள் மாவட்ட நிர்வாகத்தினரிடம் சீரமைக்க வலியுறுத்தி உள்ளனர். தற்போது சூளகிரி தாலுகாவாக அறிவித்த நிலையில், சிதிலமடைந்து காணப்படும் அந்த காவலர் குடியிருப்புகளை சீரமைத்து தர வேண்டும் என குடியிருப்பில் வசித்து வருபவர்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: