கள்ளச்சாராய வியாபாரி குண்டாசில் கைது

தர்மபுரி, நவ.5: அரூர் அருகே கள்ளச்சாராய வியாபாரி குண்டாசில் சிறையில் அடைக்கப்பட்டார்.தர்மபுரி மாவட்டம் அரூர் வேலனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி(50). இவர், சமீபத்தில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக, அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 110 லிட்டர் கள்ளச் சாராயம் கைப்பற்றி அழிக்கப்பட்டது. சாராய விற்பனை செய்யக்கூடாது என அபராதம் விதிக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். பழனி மீது ஏற்கனவே அரூர் மதுவிலக்கு பிரிவில் 5 வழக்கு உள்ளது. இதில் ஒரு வழக்கில் நீதிமன்றம் சென்று ₹500 அபராதம் செலுத்தியுள்ளார். இந்நிலையில், அவர் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாலும், ஏற்கனவே 5 முறை கள்ளச்சாராய விற்பனை செய்ததாக வழக்கு இருப்பதால், அவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்திடில் சிறையில் அடைக்க எஸ்பி ராஜன், தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழிக்கு பரிந்துரை செய்தார். இதன்பேரில், மாவட்ட கலெக்டர் விசாரித்து பழனியை குண்டாசில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள பழனியிடம் அதற்கான நகல் வழங்கப்பட்டது.

Related Stories: