திருமங்கலம் ஒன்றியத்தில் அதிகளவில் பெண் கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு

திருமங்கலம், டிச. 5: திருமங்கலம் ஒன்றியத்தில் இந்த முறை அதிகளவில் பெண் ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்வாகும் நிலை உருவாகிகயுள்ளது.

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 16 ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இவர்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஒன்றியத்திலுள்ள 1 முதல் 16 வார்டுகள் வரையில் ஒன்றிய கவுன்சில்களில் யார், யார் போட்டியிடலாம் என்ற விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி வார்டு 1 பெண்கள் பொதுவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 2வது வார்டு பொது வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. வார்டு 3 ஆதிதிராவிட பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வார்டு 4, 5, 6 பொதுவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டு 7 பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வார்டு 8, 9 பொது உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வார்டு 10, 11, 12 பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வார்டு 14 ஆதிதிராவிட பெண் வார்டாகவும், வார்டு 15 ஆதிதிராவிட பொது வார்டாகவும் அமைந்துள்ளது. வார்டு 16 பொது வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் 16 வார்டுகளில் பெண்களுக்கு என 8 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர பொதுவார்டிலும் பெண்கள் போட்டியிடலாம் என்பதால் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களில் இந்த முறை பெண் கவுன்சிலர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: