இடைப்பாடி புதன்சந்தையில் ₹40 லட்சத்துக்கு வர்த்தகம்

இடைப்பாடி, டிச.5: இடைப்பாடி புதன்சந்தையில் நேற்று ₹40 லட்சத்துக்கு காய்கறிகள் மற்றும் சேவல் விற்பனையானது.இடைப்பாடியில் வாரந்தோறும் புதன்கிழமை சந்தை கூடுகிறது. சேலம் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காய்கறிகளை கொணடு வந்து சந்தையில் விற்பனை செய்கின்றனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சந்தையில் காய்கறிகளை வாங்கிச்செல்கின்றனர். நேற்று கூடிய சந்தைக்கு விவசாயிகள் 90 டன் காய்கறிகளையும், 1900  சேவல்களையும் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சந்தையில் கேரட் ஒரு கிலோ ₹50 முதல் ₹75 வரையும், பீன்ஸ் ₹50,  பீட்ரூட் ₹30, முட்டைகோஸ் ₹22, முள்ளங்கி ₹25, தக்காளி ₹25, பெரிய வெங்காயம் ₹90 முதல் ₹110 வரையும், சின்னவெங்காயம் ₹90 முதல் ₹130 வரையும், இஞ்சி ₹80க்கும், பச்சை மிளகாய் ₹30க்கும், சேவல் ₹300 முதல் ₹900 வரையும், கோழி ₹150 முதல் ₹600 வரையும் விற்பனையானது. நேற்றைய சந்தைக்கு 90 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்திருந்தது. சந்தையில் ₹40 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: