கெங்கவல்லி விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா பயணம்

கெங்கவல்லி, டிச.5:  கெங்கவல்லி  வட்டார வேளாண்மைத்துறை சார்பில், ஐதராபாத்தில் உள்ள மத்திய மானாவாரி  வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற பயிற்சியில், கெங்கவல்லி  சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், கண்டுணர்வு சுற்றுலா சென்று பங்கேற்றனர். நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு நீடித்த  நிலையான மானாவாரி இயக்கம், மானாவாரி சாகுபடி தொழில்நுட்பங்கள், மானாவாரி  நிலத்தில் சிறுதானியம் சாகுபடி முறைகள், எண்ணெய் வித்துப்பயிர் சாகுபடி  முறைகள், பயிர் சாகுபடி முறைகள் மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டுதல்  பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டன.  இதில் கெங்கவல்லி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சித்ரா மற்றும் வேளாண்  அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுற்றுலா ஏற்பாடுகளை அட்மா திட்ட  தொழில்நுட்ப மேலாளர் அற்புத வேலன், மோகன்ராஜ், சங்கர் ஆகியோர்  செய்திருந்தனர்.

Related Stories: