உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுக.,வில் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல்

ஊட்டி,டிச.5:உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுக., சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர் காணல் துவங்கியது. தமிழகத்தில்  வரும் 27, 30 ஆகிய தேதிகளில் முதற் கட்டமாக ஊராட்சி பகுதிகளுக்கு  உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு வரும் முன்னரே அனைத்து கட்சிகளும்  உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் விருப்பமனுக்களை பெற துவங்கின. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் தற்போது அனைத்து கட்சிகளும் நேர்காணல் நடத்தி வருகிறது. திமுக., சார்பில் விருப்ப மனு அளித்தவர்களுக்கு ஊட்டியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நேற்று  முன்தினம் முதல் நேர்காணல் துவங்கி நடந்து வருகிறது.  இதற்கு மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை  வகித்தார். தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளர் ராமசந்திரன், மாவட்ட துணை  செயலாளர் ரவிக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, இளங்கோ, நகர  செயலாளர் காசிலிங்கம், பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துசாமி,  சதக்கத்துல்லா ஆகியோர் கலந்துக் கொண்டனர். இவர்கள் தேர்தலில் போட்டியிட  விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர் காணல் நடத்தினர். இதில் ஊட்டி நகரம்,  குன்னூர் நகரம், கூடலூர் நகரம் மற்றும் நெல்லியாளம்  நகரத்திற்குட்பட்டவர்களுக்கு நேர் காணல் நடந்தது.  நேற்று ஊட்டி  வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம், மேலூர் ஒன்றியம் மற்றும் குன்னூர்  ஒன்றியங்களுக்கு உட்பட்டவர்களுக்கு நேர் காணல் நடந்தது. இதில், விருப்பமனு  அளித்தவர்கள் கலந்துக் கொண்டனர்.

Related Stories: