இரும்பு சத்து மிகுந்த கீரை, பழங்கள், காய்கறிகளை கர்ப்பிணிகள் உண்ண வேண்டும்

திருத்துறைப்பூண்டி, டிச.5:

இரும்பு சத்து மிகுந்த கீரைகள் பழங்கள் காய்கறிகளை கர்ப்பிணிகளை அதிகம் உண்ண வேண்டும் என விழிப்புணர்வு முகாமில் வலியுறுத்தப்பட்டது.திருத்துறைப்பூண்டி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சுபாஷன் திவாஷ் விழிப்புணர்வு முகாம் பெரியநாயகிபுரம் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. முகாமில் மைய பணியாளர் மேனகா பேசும்போது: கற்ப்பினிதாய்மார்கள்பரிசோதனைநாள் முதல் குழந்தை பிறக்கும் நாள்வரை மூன்று முறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அடிக்கடி அருகிலுள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் குழந்தை வளர்ச்சி, எடை, உடலில் ஏற்படும் மாறுதல்கள் குறித்து ஆலோசனை பெறுவது அவசியம். மேலும் ஊட்டச்சத்து மிகுந்த சிறுதாணியங்கள், இரும்பு சத்து மிகுந்த கீரைகள், பழங்கள், காய்கறிகள்இணை உணவுகள் அடிக்கடி உண்ண வேண்டும்.

இதன் மூலம் ரத்த சோகையை தடுத்து குழந்தை ஆரோக்கியமாக பிறக்கவழி வகுக்கும். குழந்தை பெற்றதாய்மார்கள் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். 6 மாதங்களிலிருந்து இணை உணவு வழங்க வேண்டும். குழந்தையின் வளர்ச்சி குறித்து கண்காணித்து வரவேண்டும்.இதன் மூலம் குழந்தை முழு உடல் நலத்துடன் வளரவழி வகுக்கும்.குழந்தைக்கு தடுப்பூசிகளை தவறாமல் போட வேண்டும். வயதிற்கேற்ப உணவை அதிகப்படுத்திட வேண்டும். இதன் மூலம் குழந்தை நன்கு வளர்ந்து ஆரோக்கியமாக இருக்கும், வளர் இளம் பெண்கள் இரும்பு சத்து மாத்திரைகள், கீரைகள், இணை உணவுகளை உண்பதன் மூலம் ரத்த சோகையை தடுத்து ஆரோக்யமாக இருக்க முடியும் என்றார்.நிகழ்ச்சியில் கர்ப்பிணிகள் மற்றும் அவரது கணவர்கள், குழந்தை பெற்ற தாய்மார்கள், வளர் இளம் பெண்கள் கலந்து கொண்டனர். முடிவில் மைய உதவியாளர் ரத்தினகுமாரி நன்றி கூறினார்.

Related Stories: