கலெக்டர் தகவல் மாணவர்கள் வருகையை அதிகரிக்க ஏனப்பட்டி அரசு பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் உபகரணங்கள்

திருமயம், டிச.5: திருமயம் அருகே அரசு பள்ளிக்கு அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் ரூ.2 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு தேவையான பொருட்களை இலவசமாக வழங்கினர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேஉள்ள ஏனப்பட்டிஅரசு தொடக்கபள்ளியில் கடந்தஆண்டு 6 மாணவர்கள் இருந்த நிலையில் பள்ளிமூடும் நிலைக்கு வந்தது. இதனால் வேதனையடைந்த அப்பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் மற்றும் அப்பகுதிமக்கள் பள்ளி மாணவர்கள் பற்றாக்குறையால் மூடுவதை தவிர்க்க பெற்றோர்களிடம் தங்களின் பிள்ளைகளை ஏனப்பட்டி பள்ளியில் சேர்க்க கேட்டுக்கொண்டனர். இதன் விளைவாக நடப்பாண்டு ஏனப்பட்டி அரசுபள்ளியில் சுமார் 25 மாணவர்கள் படிக்கும் நிலையில் பள்ளியில் மாணவர்கள் குறையாமல் இருக்கவும், மேலும் மாணவர்களை சேர்க்கும் விதமாக பள்ளி உள்கட்டமைப்பை மாற்றவிரும்பினர்.இதனை கையில் எடுத்துக்கொண்ட அப்பகுதி இளைஞர்கள் ஊர் முக்கியஸ்தர்களிடம் நன்கொடை வசூல் செய்ததோடு, இளைஞர்களும் தங்களால் முடிந்த அளவு நன்கொடை அளித்து பள்ளி சுர்வகளில் வர்ணம் பூசி, சுவரில் ஓவியம் வரைந்து பள்ளிக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கினர்.

இதற்காக சுமார் ரூ.2 லட்சம் செலவானதாக தெரிவித்த இளைஞர்கள் மேலும் பள்ளி வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றபோவதாக தெரிவித்தனர்.இந்நிலையில் நேற்று காலை வட்டார கல்விஅலுவலர் ஜேம்ஸ் தலைமையில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டாரகல்வி அலுவலர் ராமதிலகம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாணவர்களின் பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர்கழக உறுப்பினர்கள், கிராமகல்வி குழு, மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஏனப்பட்டி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். பள்ளி தலைமைஆசிரியர் மணிமேகலை நன்றி கூறினார்.

Related Stories: