விவசாயிகளுக்கு அறிவுரைஅறந்தாங்கி அருகே சாலை ஓரங்களில் வீசி எறியப்படும் கண்ணாடி பாட்டில்கள்

அறந்தாங்கி, டிச.5: சாலை ஓரங்களிலும், நீர்நிலைகளிலும் மது அருந்திவிட்டு வீசும் கண்ணாடி பாட்டில்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.உலகில் பல்வேறு நாடுகளிலும் மதுபானங்கள் கண்ணாடி பாட்டில்கள், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள், அலுமினிய பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகத்தில் மதுபானங்கள் கண்ணாடி பாட்டில்களிலும், புதுச்சேரியில் கண்ணாடி, அலுமினியம்,மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

வெளிநாடுகளில் மதுபானங்கள் கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்டாலும், அங்கு மதுபானம் அருந்துபவர்கள் மதுக்கூடங்களிலும், வீடுகள், கேளிக்கை விடுதிகள் மட்டுமே மது அருந்துகின்றனர். மது அருந்திய கண்ணாடி பாட்டில்களை பாதுகாப்பாக எடுத்து வைக்கின்றனர். பல நாடுகளில் மது அருந்துவது குற்றமாகவும், பல நாடுகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளில் மது அருந்துவகுற்றமாகவும் உள்ளதால், சாலை ஓரத்திலோ, நீர்நிலைகளின் அருகிலோ மது அருந்துவதில்லை.

ஆனால் தமிழகத்தில் மதுவின் பயன்பாட்டை குறைக்க தமிழக அரசு டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கும் நேரத்தை குறைத்துள்ளது. அரசு டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கும் நேரத்தை குறைத்தாலும், பெரும்பாலான பகுதிகளில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மது அருந்துவது அடுத்தவர்களுக்கு தெரியக்கூடாது என நினைக்கும் மதுப்பிரியர்கள், மதுபான பாட்டில்களை வாங்கிக் கொண்டு, நீர்நிலைகளின் அருகிலோ, சாலை ஓரத்திலோ தங்கள் நண்பர்களுடன் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்கள் அவர் மது அருந்தியவுடன், காலியான மதுபாட்டில்களை நீர்நிலைகளிலோ, சாலை ஓரங்களிலோ வீசிச் செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் பாட்டில்களை போதையில் வீசும்போது பாட்டில்கள் உடைந்து விடுகின்றன. இவ்வாறு உடையும் பாட்டில்கள் சிதறல்கள் மீது அவ்வழியே செல்லும் யாரேனும் காலை வைத்துவிட்டால், கண்ணாடி சிதறல்கள் காலில் குத்தி விடுகின்றன. கண்ணாடி சிதறல்கள் காலில் குத்திவிடுவதால், அவர்கள் தங்கள் பணியை விட்டுவிட்டு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

தமிழகம் முழுதும் உள்ள நீர்நிலைகளில் கோடிக்கணக்கான காலி மதுபான கண்ணாடி பாட்டில்கள் கிடக்கின்றன. இந்த பாட்டில்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. கண்ணாடி பாட்டில் பிரச்னை இன்னும் சில ஆண்டுகளில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது. கண்ணாடி மறுசுழற்சி செய்யமுடியாதது என்பதால் அதன்பாதிப்பு இன்னும் சில ஆண்டுகளில் தெரியவரும்.எனவே தமிழக அரசு மதுபான விற்பனைக்காக மதுபானத்தை வாங்கிச் சென்று பொதுஇடங்களில் வைத்து, அருந்துபவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதை தடுத்து, இனிமேலாவது நீர்நிலைகள், சாலை ஓரங்களில் மது அருந்துபவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ளதைப்போல தமிழ்நாட்டிலும் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள், அலுமினிய பாட்டில்களில் மதுபானங்களை அடைத்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: