தொடர் மழையால் நாற்றுகள் அழுகியது விவசாயிகள் கவலை

மயிலாடுதுறை, டிச.5: மயிலாடுதுறையில் பெய்த தொடர் மழையால் நெற்பயிர்கள் இளம் நாற்றுகள் அழுகியது.நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்துவந்ததால் கடந்த 20 நாட்களுக்குள் நட்ட சம்பா மற்றும் தாளடி நாற்றுகள் கடந்த மூன்று தினங்களாக மழைநீரில் மூழ்கியிருந்தது. தற்பொழுது இரண்டு நாட்களாக மழைவிட்டதால் வயல்வெளிகளில் தேங்கியிருந்த மழைநீர் வடிய ஆரம்பித்துள்ளது. ஆனால் நட்டிருந்த பயிர்களின் முனைகள் அழுகியுள்ளது. தூர்மட்டும் அழுகாமல் உள்ளதால் அவற்றிற்குத் தேவையான யூரியா மற்றும் உரங்கள் அளித்தால் ஓரளவிற்கு திரும்ப பயிர்கள் கிளம்ப வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் இதுபோல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். குறிப்பிட்ட காலத்தில் நட்டிருந்தால் இதுபோன்ற சேதத்தை தவிர்த்திருக்கலாம் என்றும் ஆனால் நடுவதற்கு கூலி ஆட்கள் கிடைக்கவில்லை என்பதால் நடுவதற்கு தள்ளிப்போனதால் 20 தினங்களுக்கு முன்பு நட்ட பயிர்கள் இந்தமழையில் சிக்கி அழுகியதாக தெரிவிக்கின்றனர்.

Related Stories: