நாகையில் குடியிருப்பு பகுதியில் சாலையில் ஓடும் கழிவுநீரால் நோய்பரவும் அபாயம்

நாகை, டிச.5: நாகை நகராட்சி சாலமன் தோட்டத்தில் வழிந்தோடும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.கை நகர எல்லைக்கு உட்பட்டது சாலமன் தோட்டம். இந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பாதாள சாக்கடையில் மேன்ஹோல் பகுதியில் இருந்து கழிவு நீர் கடந்த சில தினங்களாக வெளியேறி வருகிறது. இந்நிலையில் நாகையில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழை காரணமாக மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள சாலைகளில் வழிந்தோடுகிறது. பல முறை நகராட்சியில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த சில தினங்களாக நாகையில் மழை குறைந்ததால் கழிவு நீர் வழிந்தோடுவது குறைந்துள்ளது. இந்த நேரத்தில் எதிர்வரும் காலங்களில் பாதாள சாக்கடை நீர் சாலைகளில் வழிந்தோடாமல் இருக்க நகராட்சி சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்காமல் இருந்தால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படும் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: