பாதாள சாக்கடை மூடியை சரி செய்ய வேண்டும் அரசு பேருந்து மீது கல் வீசி கண்ணாடி உடைப்பு: 2 பேர் கைது

அரவக்குறிச்சி, டிச. 5:அரவக்குறிச்சி அருகே அரசு பேருந்து மீது கல்லெறிந்த கண்ணடியை உடைத்து சேதப்படுத்திய 2 பேரை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.சேலத்திலிருந்து அரசு பேரூந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு திண்டுக்கல்லுக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்தை மேட்டூர் சானர் பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ்.(42). ஓட்டி வந்தார்.பேருந்து கரூர் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சியை அடுத்த பெத்தாங்கோட்டை பிரிவு அருகே வந்த போது,இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவர் திடீரென்று கல்லை பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது வீசி எறிந்தார், இதனால் கண்ணாடி உடைந்து விட்டது. ஓட்டுநர் சுதாரித்து கொண்டு பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு பார்த்தபொழுது பேருந்து கண்ணாடி உடைந்திருந்தது. சேதப்படுத்தியவர்கள் தப்பி விட்டனர். உடனே டிரைவர் கோவிந்தராஜ் அரவக்குறிச்சி போலீசுக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து, கரூர் ரயில்வே காலனியைச் சேர்ந்த வரதன், அரவக்குறிச்சி என்.வெங்கடாபுரத்தைச் சேர்ந்த முருகேசன் ஆகியோரை கைது செய்தனர்.

கரூர்,டிச.5:பாதாள சாக்கடை மூடியை சரிசெய்ய பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் பிரம்மதீர்த்தக்குளம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டதால் அதனை சரிசெய்வதற்காக தோண்டப்பட்டு மேன்ஹோல் மூடி அகற்றப்பட்டது. பின்னர் மூடியை சரியாக சிமென்ட் பூச்சு செய்யாமலும் சாலையை சரிசெய்யாமலும் உள்ளனர். இதனால் இந்த இடத்தில் சாலைத்தடுப்பினை வைத்து மறைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். துரிதமாக இதனை சரி செய்யவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: