உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பெட்டிகள் தயார் செய்யும் பணி மும்முரம்

கரூர், டிச.5: உள்ளாட்சித்தேர்தலுக்கான ஓட்டுப்பெட்டிகளை தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது.தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30ம்தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ஊரகப்பகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் 8ஒன்றியங்களில் இந்த தேர்தல் நடைபெற உள்ளது,, நாளை வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. 13ம்தேதி வரை வேட்புமனுதாக்கல் நடைபெறும். 983 வாக்குச்சாவடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு 8ஒன்றியங்களிலும் உள்ள அலுவலகங்களில் ஓட்டுப்பெட்டிகளை தயார்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பெட்டிகளை சுத்தம் செய்வது, மராமத்துப்பணிகளை செய்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் 12மாவட்ட ஊராட்சிவார்டு உறுப்பினர் பதவி, 115ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி, 157கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும், 1,401 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 1,685 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

ஒன்றியம் வாரியாக வாக்காளர்கள்:

கரூர்:ஆண்கள் 31,561, பெண்கள் 34,952, மொத்தம் 66,513,

தாந்தோணி: ஆண்கள் 33,266, பெண்கள் 36,032, இதரர் 1 மொத்தம் 69,299

அரவக்குறிச்சி: ஆண்கள் 24,512, பெண்கள் 25,652, மொத்தம் 50,164.

க.பரமத்தி: ஆண்கள் 33,301, பெண்கள் 35,849, இதரர் 1, மொத்தம் 69,151,

குளித்தலை:ஆண்கள் 22,519, பெண்கள் 23,766, இதரர் 1 மொத்தம் 46,286.

கடவூர்: ஆண்கள் 36,768, பெண்கள் 36.642. இதரர்2 மொத்தம் 73,412.

கிருஷ்ணராயபுரம்: ஆண்கள் 43,445, பெண்கள் 44,364, இதரர் 43 மொத்தம் 87,852,

தோைகமலை : ஆண்கள் 34,707, பெண்கள் 35,909, இதரர் 2, மொத்தம் 70,618,

கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சிஒன்றியங்களிலும் சேர்த்து 2,60,079 ஆண், 2,73,166 பெண் வாக்காளர்கள், இதரர் 50நபர்கள், என மொத்தம் 5,33,295 வாக்காளர்கள் உள்ளனர். ஊரகப் பகுதிக்கான உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 18தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 222உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணியில ஈடுபடுத்தப்படவுள்ளனர். மொத்தம் 983வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. வாக்குச்சாவடி மையங் களில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் வகையில், கழிவறை, குடிநீர், மின்சாரவசதிகள் கூடுதலாக தேவைப்படும் இடங்களை கண்டறிந்து அதற்கான பணிகளில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.  மேலும் மாற்றுத்திறனாளிகளும் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்தளங்கள் இருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் சாய்தளங்கள் இல்லாத வாக்குச்சாவடி மையங்களை கண்டறிந்து அவற்றில் முறையான சாய்தளங்கள் அமைக்கப்படுகின்றன.

Related Stories: