கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி விற்பனைக்கு குவியும் வாழை பழங்கள்

திருவண்ணாமலை, டிச.5: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி விற்பனைக்காக வாழை பழம் வரத்து அதிகரித்துள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழா தொடங்கியதை அடுத்து நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவினைகான பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், திருவிழாவையொட்டி பல வகையான கடைகளும் வரத்தொடங்கியுள்ள நிலையில், வாழை பழம் வரத்து கடந்த 2 நாட்களாக வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. தீபத்திருவிழாவிற்கு லட்சகணக்கான பக்தர்கள் வருவார்கள், அதிக வியாபாரம் நடைபெறும் என்ற நம்பிக்கையில் வாழை தார்கள் வரத்து அதிகரித்துள்ளது. திருவண்ணாமலை அடுத்த செங்கம், சந்தவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வாழை தார்கள் வரத்து அதிகரித்துள்ளது. வரத்து அதிகரித்துள்தால் தார் ஒன்று ₹300 முதல் ₹400 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றனர் வியாபாரிகள்.

Related Stories: