முட்டை விலை உயர வாய்ப்பு

நாமக்கல், டிச. 4: நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: வடக்கில் குளிர் ஒரளவு ஆரம்பமாகியுள்ளதால், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் முட்டை விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் பர்வாலா முட்டை விலை கணிசமாக உயர ஆரம்பித்துள்ளது. வடக்கில் குளிர்பதன கிட்டங்கிகளில் முட்டை இருப்பு குறைவாக உள்ளதால் முட்டைக்கான தேவை பிரகாசமாக இருக்கிறது. ஹைதராபாத், ஹோஸ்பெட் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 6 மாத காலமாக பண்ணைகளில் குஞ்சு விடுவது குறைந்து இருந்ததால் முட்டை உற்பத்தி குறைந்துள்ளது. எனவே வரும் நாட்களில் அனைத்து மண்டலங்களிலும் முட்டை விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories: