மாவட்டம் முழுவதும் தொடர் மழையால் நெல் அறுவடை பாதிப்பு

கிருஷ்ணகிரி, டிச.4: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழை மற்றும் ஆட்கள் பற்றாக்குறையால் நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, தளி, காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நெல், காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த 2 வருடங்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை பொய்த்து போனதால், கடும் வறட்சி நிலவி காய்கறிகளின் விலை அதிகரித்தது. பல பகுதிகளில் மா, தென்னை மரங்களும் காய்ந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் நீர் நிலைகளில் நிரம்பி வருகிறது. இந்த பயன்படுத்தி பயன்படுத்தி விவசாயிகள் நெற்பயிரைதாமதமாக  நடவு செய்தனர். இதையடுத்து, 2ம் போக நெல் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. அனைத்து பகுதிகளிலும் ஒரே நேரத்தில் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளதால், ஆட்கள் பற்றாக்குறை மற்றும் தொடர் மழையாலும் நெல் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பருவம் தவறிய மழையால் 2ம் போக நெல் சாகுபடி கால தாமதமானது. இந்நிலையில், தொடர் சாரல் மழை மற்றும் கூலி ஆட்கள் பற்றாக்குறை காரணமாக நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கதிர் முற்றி காணப்படும் நெல்லை உரிய நேரத்தில் அறுவடை செய்யாவிட்டால் மொத்த சாகுபடியும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

Related Stories: